ஆன்லைன்-ல் வித்தியாசமான சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific calculator) - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, November 25, 2010

ஆன்லைன்-ல் வித்தியாசமான சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific calculator)

ஆன்லைன் -ல் நமக்கு உதவ வித்தியாசமான கால்குலேட்டர் உள்ளது.
இதன் துணையுடன் நாம் கணக்கு மட்டுமல்ல கிராப் (Maths graph)-ம்
எளிதாக பார்க்கலாம்  இதைத்தவிர கடினமான கணக்கிற்கும் எளிய
முறையில் தீர்வு அளிக்கும் சேவையையும் வழங்குகிறது ஒரு
இணையதளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



மொபைல் போனிலே கால்குலேட்டர் வந்துவிட்டது. கால்குலேட்டர்
இல்லாத கணினி கிடையாது இருந்தும் நாம் ஏன் ஆன்லைன் சென்று
இந்த கால்குலேட்டரை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு
ஒரு முறை நாம் இந்ததளத்திற்கு சென்று ஒரு கணக்கு சமன்பாட்டை
கொடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். பயன்படுத்துவதிலும்
தோற்றத்திலும் எளிமை ஆனால் செய்யும் வேலை பலே என்று
சொல்லும் அளவுக்கு இந்ததளம் உள்ளது.

இணையதள முகவரி : http://web2.0calc.com

[caption id="attachment_4105" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

இந்ததளத்திற்கு சென்று நாம் கடினமான கணக்கு என்று சொல்லும்
அத்தனை கணக்கிற்கும் விடை எளிதாக கண்டுபிடிக்கலாம். Matrix
மேட்ரிக்ஸ் -ல் இருந்து log வரை நாம் அத்தனை வகையான
கணக்கிற்கும் எளிதாக விடை காணலாம். graph கூட எளிதாக
இந்ததளம் மூலம் போட்டு பார்த்துக்கொள்ளலாம். கணிதத்தில்
இருக்கும் அனைத்து சமன்பாடுகளையும் பயன்படுத்தும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் கணித ஆசிரியர்கள்
வரை அனைவருக்கும் பயன்தரும் தளமாக இது இருக்கும்.


வின்மணி சிந்தனை
விட்டு கொடுக்கும் யாரும் கெட்டுபோனதாக சரித்திரம்
இல்லை இனி இருக்கப்போவதும் இல்லை.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் தரமான மிளகு விளையும் இடம் எது ?
2.உலகின் மிகப்பெரிய ஏரி எது ?
3.கார் உற்பத்தியில் முன்னனியில் விளங்கும் நாடு எது ?
4.உலகில் பருத்தி அதிகமாக விளையும் இடம் எது ?
5.இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
6.ஆமைகளின் உணவு என்ன ?
7.இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கும் இடம் எது ?
8.ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை உருவாக்கியவர் யார் ?
9.இந்தியாவில் வருமானவரி அமலான ஆண்டு எது ?
10.நெதர்லாந்து மக்கள் எப்படி அழைக்கப்படுகின்றனர் ?
பதில்கள்:
1.கேரளா,2.காஸ்பியன்,3.ஜப்பான்,4.சீனா,5.சுசேதாகிருபளானி,
6.இலை , புல்,7.பீஹார், 8.நேதாஜி, 9.1917.
10.டச்சுக்காரர்கள்.


இன்று நவம்பர் 25 
பெயர் : கார்ல் பென்ஸ் ,
பிறந்த தேதி : நவம்பர் 25, 1844
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வாகனப்பொறியாளர்.
இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக்
கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.இவர் 1886-ல்
மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது
முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும்
இயங்கியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. அழகான கால்குலேட்டர்! அருமை!

    ReplyDelete
  2. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி...

    ReplyDelete
  4. அருமையாக இயங்குகிறது.

    ReplyDelete
  5. @ தமிழ்உலகம்2010
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. @ jiyathahamed
    மிக்க நன்றி.

    ReplyDelete

Post Top Ad