ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ) - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, November 8, 2010

ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )

வேகத்தையும், ஆற்றல், நீளம் , அகலம் , அழுத்தம், எடையின்
அளவையும்   ஒன்றிலிருந்து  மற்றொன்றாக எளிதாக மாற்றலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற உதவும் கன்வெர்டர் மூலம்
எளிதாக ஆன்லைன் -ல் இருந்தபடியே Angle , Area , Bits & Bytes,
Density , Electric Current , Energy , Force, Fuel Consumption ,
Length , Mass , Power , Pressure , Speed, Temperature , Time ,
Volume போன்ற அத்தனையையும் எளிதாக கன்வெர்ட் செய்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.digitaldutch.com/unitconverter/

இந்தத்தளத்திற்கு சென்று நாம்  From  என்ற கட்டத்திற்க்குள் எந்த
அளவில் இருக்கிறது என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து இரண்டாவதாக இருக்கும்  To என்பதில் எதாக மாற்ற
வேண்டுமோ அதை தேர்ந்த்டுக்கவும்.  உடனுக்குடன் எளிதாக
தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த
Converter  தளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
வெற்றி பெரும் நாளில் நம்மை பெற்றவர்களுக்கும்
இறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மண்புழு எவ்வகை உயிரி ?
2.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ?
3.ஜி.டிநாயுடுவின் இயற்பெயர் என்ன ?
4.புகழ் பெற்ற இந்திய நுழைவாயில் எத்தனை அடி
உயரமுள்ளது ?
5.கயானாவின் தலைநகர் எது ?
6.வெள்ளை பிளனேரியாவின் விருப்பமான உணவு எது ? 
7.ஆரியப்பட்டா எழுதிய அறிவியல் நூல் எது ?
8.முதல் குளிர்கால ஒலிம்பிக் எந்த நகரத்தில் நடைபெற்றது?
9.பன்றி நாடாப்புழுவின் நீளம் என்ன ?
10.நிலத்தில் ஒருமைல் என்பது எத்தனை அடியைக் குறிக்கும்?
பதில்கள்:
1.இருபால் உயிரி, 2.ஆலம் ஆரா,3.துரைசாமி நாயுடு,
4.63 அடி, 5.ஜயார்ஜ் டவுன்,6.கொசு, 7.ஆரியபட்டீயம்,
8.சமோனிக்ஸ் (பிரான்ஸ்), 9.சுமார் 3 மீட்டர்.10.6080 அடிகள்


இன்று நவம்பர் 8 
பெயர் : லால் கிருஷ்ண அத்வானி ,
பிறந்ததேதி : நவம்பர் 8 , 1927
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர்
ஆவார். தற்போது இந்திய மக்களவையில் எதிர்
கட்சி தலைவராக உள்ளார். 2002 முதல் 2004
வரை இந்தியாவின் துணை பிரதமராக பணி
ஆற்றினார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

Post Top Ad