விளையாட்டின் காட்சி வடிவமைப்பு மட்டும் நமக்கு பிரம்மாண்டத்தை
ஏற்படுத்தாமல் நம் அறிவையும் நுனுக்கத்தையும் மேம்படுத்துவதாகவே
உள்ளது இலவசமாக கிடைக்கும் 3D விளையாட்டைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
முப்பரிமானத்தில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் தனி விருப்பம் தான் இதிலும் Realtime
விளையாட்டு என்றால் அதற்கு மேலும் சிறப்பு தான். இந்த
வகையில் இன்று சுதந்திர டாப் மென்பொருளில் 5 வது இடத்தை
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயட் Glest.
விளையாடுவதற்கு எளிமையும் அதே சமயம் பிரம்மாண்டத்திற்கு
எந்தவித குறையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி
அனைவருக்கும் புதுவிதமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த விளையாட்டின் Locations , Objects என அனைத்துமே
மாயாஜாலமாகவும் அசத்தலாகவும் இருக்கிறது. வேலை செய்யவே
நேரம் இல்லை இதில் விளையாட்டுக்கு ஏது நேரம் என்று
எண்ணுபவர்களின் மண்டைக்கு புத்துணர்சி அளிக்கும் வகையில்
இந்த விளையாட்டு அமைந்துள்ளது. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்.
Download
வின்மணி சிந்தனை
பொழுது போக்கு மனிதனுக்கு புத்துணர்சியை தரும்.
அதே நேரம் அதிகமான பொழுது போக்கு நம் வெற்றியை
தாமதப்படுத்தும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஐரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டது எப்போது ?
2.மெழுகுவர்த்தி எப்பொருளில் செய்யப்படுகிறது ?
3.நோபல் பரிசு பெற்ற் முதல் இந்தியர் யார் ?
4.ரேடியோ அலைகளின் வேகம் என்ன ?
5.உடன்கட்டை ஏறும் வழக்கம் தடை செய்யப்பட்டது எப்போது ?
6.பிரான்ஸின் தேசிய மலர் எது ?
7.இந்திய முதல் பெண் அமைச்சர் யார் ?
8.பாரதத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை வருடம் நீடிக்கலாம் ?
9.வெடிமருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.டேபிள் டென்னிஸ்க்கு ஆதியில் வழங்கப்பட்ட பெயர் என்ன ?
பதில்கள்:
1.18 ஆம் நூற்றாண்டில்,2.பாரபின் மெழுகு,3.ரவீந்திரநாத் தாகூர்,
4.வினாடிக்கு 1,86,000 மைல்கள்,5.1829 ,6.லில்லி,7.சுசேதா
கிருபாளனி,8.3 ஆண்டு.9.கந்தகம், வெடிஉப்பு, 10.பிங்பாங்.
இன்று டிசம்பர் 31
பெயர் : அலெக்சாண்டர் பப்போவ்
மறைந்த தேதி : டிசம்பர் 31, 1905
அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ்
என்ற இவர் ரஷ்யாவின் இயற்பியலாளர் ஆவார்.
இவரே மின்காந்த வானொலி அலைகளை
முதன் முதலில் காட்சிப்படுத்தினார் எனினும்
இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம்
கோரவில்லை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
வன்முறை இல்லாத Game ஆக இருந்தால் குழந்தைகளுக்கு உபயேகம் உள்ளதாக இருக்கும்
ReplyDeleteகுழந்தைகளுக்கு பிடிக்கும் விளையாட்டு .பதிவிற்கு நன்றி..!! :O
ReplyDeletenice one! Gameplay with mouse only. no use of keys!
ReplyDelete@ Speed Master
ReplyDeleteபயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நன்றி
@ salemdeva
ReplyDeleteமிக்க நன்றி
@ எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி