ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, December 10, 2010

ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி

உலக அளவிலும் , மொழி அளவிலும் ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள நண்பர்களை டிவிட்டரில் எளிதாக தேடி அவர்களுடன் நட்பு
கொண்டாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

[caption id="attachment_4270" align="aligncenter" width="288" caption="படம் 1"][/caption]

நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறலாம், மொழி மாறலாம் ஆனால்
மாறாத ஒன்று அன்பும் எண்ணமும் தான் , ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள பல பேர் டிவிட்டரில் இருக்கலாம் இவர்களை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.twitterel.com



இந்ததளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Sign in with
Twitter என்ற பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் கணக்கை திறந்து
கொள்ளவும் அடுத்து வரும் திரையில் Allow என்ற பொத்தானை
அழுத்தவும். அடுத்த திரை படம் 1ல் உள்ளது போல் வரும் இதில்
இதில் நாம் புதிய Keywords சேர்ப்பதாக இருந்தால் சேர்க்கலாம்
அல்லது Find twitters who tweeped this word என்பதை சொடுக்கி
விரும்பிய எண்ணத்தை கொடுத்து நம்மைப்போல் எண்ணம்
உள்ளவர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.புதுமை விரும்பிகளுக்கு
இந்ததளம் பயன்உள்ளதாகவும் தங்கள் வியாபார மற்றும் கல்வி
சம்பந்தமான தகவல்களை கொண்டுள்ள நபர்களிடம் நட்பு வட்டத்தை
விரிவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது.



வின்மணி சிந்தனை
பிறரை மதிக்கத் தெரியும் நபர்களிடம் இருக்கும்
எல்லாச் செயல்களிலும் வெற்றி நிச்சயம்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோள்களில் ஒளி மிகுந்த கோள் எது ?
2.இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் என்ன ?
3.கோபி பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது ?
4.காற்று மண்டலத்தின் உயிர் காக்கும் படலமாக விளங்குவது
 என்ன ?
5.ரஷியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
6.32 நாட்கள் கொண்ட தமிழ் மாதம் என்ன ?
7.உலகிலேயே மிகப்பெரிய கடல் எது ?
8.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன ?
9.மலேசியாவின் பழைய பெயர் என்ன ?
10.எந்த நாய்க்கு குரைக்கத் தெரியாது ?
பதில்கள்:
1.சுக்கிரன்,2.சிம்லா,3.மங்கோலியா, 4.ஒசோன், 5.டூபிள்,
6.ஆடி, 7.பசிபிக் பெருங்கடல்,8.கூடைப்பந்து,
9.மலேயா,10.டிங்கோ.



இன்று டிசம்பர் 10 
பெயர் : இராஜாஜி ,
மறைந்த தேதி : டிசம்பர் 10, 1972
இராஜாஜி என்று அழைக்கப்படும் இராஜ
கோபாலாச்சாரி
ஒர் இந்திய சுதந்திரப்
போராட்ட வீரர்.வழக்கறிஞர்,
எழுத்தாளர்,
அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல்
கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. Please re check your 6 th answer.

    ReplyDelete
  2. @ jana
    நண்பருக்கு , தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை - 30 நாட்கள். மார்கழி - 29+ நாட்கள்.
    ஏன் இப்படி?

    தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டையும்
    பொறுத்தது. சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும்
    நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் -
    டிஸெம்பர்/மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில்.
    Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள்.
    ஆனி, ஆடி என்று இருந்தாலும் பொதுவாக புத்தகத்தில் ஆனி என்று தான் இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete

Post Top Ad