செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, December 11, 2010

செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

செல்லப்பிராணிகள் என்று சொல்லக்கூடிய நாய், பூனை மற்றும்
பல பிராணிகளுக்கான நிகழ்ச்சி எங்கு எப்போது நடைபெறுகிறது
இதைப் பற்றிய முழுவிபரங்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



நம் வீட்டு செல்ல்பிராணிகளுக்கான எப்படி அழகுபடுத்தலாம்
மேலும் செல்லப்பிராணிகள் செய்யும் அழகான செய்கைகளுக்காக
ஒரு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர்
-களுக்கு உதவ ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://yapsie.com/events

இந்தத்தளம் உதவி செய்கிறது என்றால் பண உதவி அல்ல, நாம்
நிகழ்ச்சி நடத்தும் தேதி, இடம் மற்றும் பல தகவல்களையும்
இந்தத்தளம் மூலம் நம் ஊரில் மட்டுமல்ல்ல உலகில் உள்ள
அனைவருக்கும் தெரியும் வண்ணம் சொல்லலாம். உங்கள்
செல்லப்பிராணிகள் செய்யும் சாகசம் என்ன என்பதையும் அதன்
புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். வெளிநாட்டில் இது
போன்று செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடத்துபவர்களின்
பார்வையில் உங்கள் செல்லப்பிராணிகள் பட்டால் பணமும்
கூடவே வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். எங்கு
சென்று தங்கள் பிராணிகளின் திறமையை உலகறியச் செய்யலாம்
என்று நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
உதவும் குணம் இருப்பவர்களுடன் வெற்றி எப்போதும்
கூடவே இருக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருக்குறள் முதன் முதலாக எந்த மொழியில் மொழி
பெயர்க்கப்பட்டது ?
2.விக்டோரியா நினைவுப் பொருட்காட்சி சாலை எங்குள்ளது ?
3.பகவத்கீதையில் எத்தனை யோகங்கள் உள்ளது ?
4.தென் அமெரிக்க நாட்டிற்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளது?
5.அர்ஜூனன் கையில் இருந்த வில்லின் பெயர் என்ன ?
6.மலையாள மொழியில் உருவான முதல் பேசும் படம் எது ?
7.முதல் ஜனாதிபதி பரிசு பெற்ற திரைப்படம் எது ?
8.நவீன வானவியல் கோட்பாடினை உருவாக்கியவர் யார் ?
9.தமிழியக்கம் நூலின் ஆசிரியர் யார் ?
10.தொலைகாட்சியை கண்டுபிடித்தவர்கள் யார் ?
பதில்கள்:
1.இலத்தீன்,2.கொல்கத்தா,3.18 யோகங்கள், 4.மூன்று,
5.காண்டீபம், 6.பாலன், 7.மலைக்கள்ளன்,8.கோபர் நிக்கஸ்,
9.பாரதிதாசன்,10.ஜே.எல்.பெயர்டு


இன்று டிசம்பர் 11 
பெயர் : சுப்பிரமணிய பாரதி,
பிறந்த தேதி : டிசம்பர் 11, 1882

பாரதியார் என்றும், மகாகவி என்றும்
அழைக்கப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள்
கொண்டவர்.சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரின் எழுச்சி பாடல்கள்
என்றும் அழியாத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது
மிகையாகாது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad