நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, December 12, 2010

நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்.

இணையதளம் ஒன்று தொடங்கினால் மட்டும் போதுமா அதில்
எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நம் கடமை தான் ,
ஆங்கில இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழைகளை எளிதாக
சுட்டிக்காட்டி சரி செய்ய ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



மைக்ரோசாப்ட் வேர்டுல் கூட Spell check என்று சொல்லக்கூடிய பிழை
திருத்தி வந்துவிட்டது இந்த் இணையதளம் அப்படி என்ன புதிதாக
திருத்திவிடப்போகிறது என்று சொல்லும் அனைவரும் பயன்படுத்திப்
பார்க்க வேண்டிய தளம்.

இணையதள முகவரி : http://orangoo.com/spellcheck

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி இடது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின்
ஆங்கில வார்த்தைகளை காப்பி செய்து Spell check your text now என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக நாம் கொடுத்த
வார்த்தையில் பிழை இருக்குமானால் அதை சுட்டிக்காட்டி அதுவே
திருத்தவும் செய்கிறது. வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம்
இணையதள முகவரியையும் நம் இமெயில் முகவரியும் கொடுத்து
Spell Check your website now என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
வரும் திரையில் அடுத்த சில நிமிடங்களில் நம் தளத்தில் இருக்கும்
பிழைகளை சுட்டிக்காட்டி நமக்கு இமெயில் வருகிறது. இணையத்தில்
பெரும்பாலும் பயன்படுத்தும் வார்த்தையை கொண்டு Spell Check
செய்வதால் இது மற்ற Spell Checker ஐ விட சற்று உபயோகமாகவே
உள்ளது.இனி ஆங்கிலத்தில் இணையதளம் ஆரம்பிக்க ஆங்கில
இலக்கணம் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை இதன் மூலம் எளிதாக பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.


வின்மணி சிந்தனை
பிறரை ஏமாற்ற நினைக்கும் மனிதர் வாழ்வில்
பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
 சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
பதில்கள்:
1.பீஹார்,2.படித்தல், எழுதல்,கணிதம்,3.ஆரியப்பட்டா,
4.எம்.ஜி.ஆர், 5.திருநெல்வேலி, 6.H.J.பாபா, 7.இந்தி,
8.கோவா, 9.கொச்சி,10.1904.


இன்று டிசம்பர் 13 
பெயர் : டார்ட்டாக்ளியா ,
மறைந்த தேதி : டிசம்பர் 13, 1557
வெனீஸ், ப்ரெஸ்சியா ஆகிய இத்தாலிய
நகரங்களில் கணித ஆசிரியராக இருந்தவர்.
எண் கணிதம், வடிவவியல், இயற்கணிதம்
மூன்றிலும் பாடபுத்தகங்கள் எழுதியவர். அவை
1556 இலிருந்து 1560 வரையில் பல மறுபதிப்புகளைப்
பார்த்தன.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. அருமையான தகவல்! நன்றி சார்!

    ReplyDelete
  2. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. Win,
    I disagree with this site but not with you :)
    It cant say malware and spyware as a mistake. I just typed this word "malware and spyware are dangerous" but it underlined both malware and spyware as error and gave some different suggestion.

    Also the best part is to use spell check before we post something...

    ReplyDelete
  4. @ abbu
    மேலோட்டமாக பார்க்கமால் சற்று விரிவாக பாருங்கள் உண்மை புரியும்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad