கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, December 17, 2010

கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

டெக்ஸ்ட் அனிமேசன் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது
மென்பொருள் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்று
இல்லாமல் எளிதாக இணையதளம் மூலம் எளிதாக யார்
வேண்டுமானாலும் டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



அனிமேசன் பற்றி படிக்கவில்லையே நம்மால் அனிமேசன் உருவாக்க
முடியுமா என்று நினைப்பவர்களுக்கு அனிமேசன் எளிதாக உருவாக்க
பல புதிய மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக
ஒரு இணையதளம் மூலம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://textanim.com



இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Text என்று
கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எந்த வார்த்தையை அனிமேசன்
செய்ய வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து  Font type , Font size , Background color , Direction (new),
Shadow Text Side ,both  right  bottom  no ,Delay movement போன்ற
அத்தனையையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டு Generate
என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்த சில நொடியில்
அதே பக்கத்தின் முகப்பில் நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன்
தெரியும். டெக்ஸ்ட் அனிமேசன் பக்கத்தில் இருக்கும் Download என்ற
பொத்தானை சொடுக்கி Gif  கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம்.
இந்த Gif கோப்பை நம் பிளாக்-ல் , Facebook-ல் பதிவேற்றலாம்.
இனி நம் விருப்பபடி டெக்ஸ்ட் அனிமேசனில் ஒவ்வொன்றாக
மாற்றி அமைத்து நமக்கு பிடித்த வகையில் அனிமேசன் வந்ததும்
அதை தரவிரக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்
காலங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் இது போன்ற
வித்தியாசமான அனிமேசனில் வாழ்த்துச்செய்திகளை அனுப்பினால்
அழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் இருக்கும்.



வின்மணி சிந்தனை
காலையில் எழுந்ததும் இன்று வெற்றியான நாளைக்
கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி என்று சொல்ல
வேண்டும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் எது ?
2.நீந்தத்தெரியாத மிருகம் எது ?
3.இந்தியாவில் ஆப்பிள் அதிகமாக விளையும் இடம் எது ?
4.உலகில் பெரிய பறவை எது ?
5.இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது ?
6.நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் ?
7.தீக்குச்சி செய்யப் பயன்படும் ரசாயன மருந்து எது ?
8.பாலின் சுத்தத்தன்மையை அளக்கப்பயன்படுத்தும் கருவி எது?
9.மிக உயரமான மிருகம் எது ?
10.ஒரு மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை
துடிக்கிறது ?
பதில்கள்:
1.மஞ்சள் காமாலை,2.ஒட்டகம்,3.சிம்லா, 4.ஆஸ்ரிட்ஜ்,
5.புலிட் ஏரி,6.ரவீந்திரநாத் தாகூர், 7.பொட்டாசியம் குளோரைடு,
8.லேக்டோ மீட்டர், 9.ஒட்டகச்சிவிங்கி,10.72 முறை.



இன்று டிசம்பர் 17 
சிறப்பு நாள் : ரைட் சகோதரர்கள் நாள் ,
ரைட் சகோதரர்கள் என்ற அமெரிக்கர்கள் முதன்
முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில்
பன்னிரெண்டு
வினாடிகள் எஞ்சின் உந்தும்
ஊர்தியில் பறந்து சாதனை
படைத்தனர். இந்த
நாள் ரைட் சகோதரர்கள் நாள் என்று

அழைக்கப்படுகிறது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

16 comments:

  1. பயனுள்ள பதிவுக்கு நன்றி..!!

    ReplyDelete
  2. @ ♠புதுவை சிவா♠
    நன்றி

    ReplyDelete
  3. @ Mohammed Rafi TMH
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. மதியரசுDecember 20, 2010 at 4:44 AM

    நன்றி. ஓவ்வொரு பதிவிலும் இடுகின்ற TNPSC கேள்வி, பதில்களை ஒன்றிணைந்த பதிவாக இட்டால் பயன்பெற முடியும்.

    ReplyDelete
  5. அட்டகாசம்! மிக்க நன்றி!

    ReplyDelete
  6. .எனக்கு ஒரு, சந்தேகம், தோழரே !

    .ஒட்டகசிவிங்கிக்கு, நீந்த தெரியுமா ?

    ReplyDelete
  7. @ மதியரசு
    விரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.
    நன்றி

    ReplyDelete
  8. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. @ vengatesh tr
    நீந்தத்தெரியாது என்று நினைக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  10. I tried for unicode to do that in tamil and its not working is there anything like that where we can do in tamil

    ReplyDelete
  11. @ Muku
    தமிழ் எழுத்துக்கு துணை புரிவதில்லை,
    நன்றி

    ReplyDelete
  12. Thank you for this useful posting....

    ReplyDelete

Post Top Ad