மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் நம் நண்பர்களுடனும்
உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
மதங்கள் எக்காரணத்தை கொண்டும் மனிதனை பிரித்து விடக்
கூடாது அதே போல் எல்லா விழாக்களையும் எல்லா மக்களும்
கொண்டாடும் நிலை வரும் போதுதான் ’மனிதம்’ என்று ஒன்று
நம்முள் இருப்பதை நாம் உணர முடியும். கிறிஸ்துமஸ் வாழ்த்து
செய்தியை பகிர்ந்து கொள்ள பல இணையதளங்கள் வந்துள்ளது
2D முதல் 3D வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பினால்
கிடைக்கும் சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தை நம்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கிறிஸ்துமஸ் தாத்தா குரலில்
வாழ்த்துச் செய்தியை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.sendacallfromsanta.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வாழ்த்துச்செய்தி அனுப்புபவர்
மற்றும் பெறுநரின் பெயர் மற்றும் அவர்களின் உறவு முறை,
அவருக்கு என்ன கிப்ட் கொடுக்க வேண்டும் நீங்கள் அவரை எப்படி
அழைப்பீர்கள் என்றும், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றும்
( அமெரிக்காவில் இருந்தால் அவர் அலைபேசி எண் கொடுக்கலாம்)
அல்லது இமெயில் முகவரி அல்லது பேஸ்புக் முகவரி கொடுத்து
வாழ்த்து செய்தி அனுப்பலாம். இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து
செய்தியை கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் அவருக்கு
அனுப்பப்பட்டிருக்கும் அதை அவர் கேட்கும் போது உங்கள் மேல்
அன்பு மேலும் பெருகும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
வின்மணி சிந்தனை
எல்லா மக்களுடனும் வாழ்த்து செய்தியை பகிர்ந்து
கொள்ளும் போது நம் மேல் நமக்கே அன்பு வருகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.செஞ்சதுக்கம் எங்குள்ளது ?
2.பஞ்சாப் தலைநகர் எது ?
3.தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எந்த ஊர் ?
4.காற்றை அளக்கும் கருவியின் பெயர் என்ன ?
5.வெடி மருந்தை முதன் முதலாக உபயோகித்த நாடு எது ?
6.தவளை இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளது ?
7.முன்னோக்கியும் பின்னோக்கியும் பறக்கக் கூடிய பறவையின்
பெயர் என்ன ?
8.தேனீக்கள் அதிகமாக இறப்பது எந்த காலத்தில் ?
9.மனிதனுக்கு அடுத்தப்படியாக மூளை உள்ள பிராணி எது ?
10.மிக உயரமான விமான தளம் எங்கிருக்கிறது ?
பதில்கள்:
1.மாஸ்கோ,2.சண்டிகர்,3.தஞ்சாவூர், 4.அனீமா மீட்டர்,
5.சைனா,6.3 அறைகள், 7.ஹம்மிங் , 8.குளிர்காலத்தில்,
9.சிம்பன்ஸி,10.லடாக்.
இன்று டிசம்பர் 21
பெயர் : கூ.சிங்தாவ்,
பிறந்த தேதி : டிசம்பர் 21, 1942
சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும்
சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும்
சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின்
தலைவரும் ஆவார்.ஹென் இனத்தைச் சேர்ந்த
-வராவார்.1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம்
ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர்
இளங்கலைப்பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும்
பெற்றவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment