பெற்றோருக்கு கணினிப் பற்றிய தகவல்களை வீடியோவுடன் புரிய
வைக்க கூகுள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
புதுமைகள் செய்வதில் தங்களுக்குள்ளே போட்டி போட்டு கொள்ளும்
கூகுள் நிறுவனத்தில் இருந்து பெற்றொருக்கு கணினி பற்றிய
அடிப்படை பாடத்தை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு
தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கூகுளின் இருந்து வெளிவந்த
தளம் என்ற வார்த்தையை கேட்டதுமே கண்ணை மூடிக்கொண்டு
பல பேர் இதில் சேர்ந்துள்ளனர்.
இணையதள முகவரி : http://www.teachparentstech.org
பெற்றொருக்கு கணினி பற்றி சொல்லிக்கொடுக்க கூட நேரம் இல்லையே
என்று சொல்லும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும். பெற்றொருக்கு இருக்கும் அடிப்படை கேள்விகளில் இருந்து
copy & paste , adjust the time on your clock , change your
desktop background , change your wallpaper (PC) , make text bigger
(or smaller) , take a screenshot, change your screensaver (Mac) ,
change your screensaver (PC) இணையதளம், மீடியா வரை அனைத்து
தகவல்களையும் வீடியோவுடன் சொல்லி எளிதாக புரிய வைக்கிறது.
வெளிவந்த சில நாட்களில் 13723 பேர் இந்ததளத்தின் மூலம் பயன்
அடைந்துள்ளனர் நாமும் நம் பெற்றொருக்கு இந்ததளத்தை அறிமுகப்
படுத்தி அவர்களுக்கு கணினி அறிவை வளர்ப்போம்.
வின்மணி சிந்தனை
அடுத்தவர் மனதை சொல்லால் காயப்படுத்தி விரதம்
இருப்பதில் எந்த பலனும் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சிப்பாய்க் கலகம் முதன் முதலில் எங்கு தொடங்கியது ?
2.காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் யார் ?
3.வினோபா துவக்கிய இயக்கத்தின் பெயர் என்ன ?
4.விதவை திருமணத்தை ஆதரித்த இந்திய விடுதலை வீரர் யார்?
5.அந்தமான் தீவுகளின் தலைநகரம் எது ?
6.சார்மினார் எங்குள்ளது ?
7.பீஹாரில் உள்ள புகழ்பெற்ற பழ்கலைக்கழகம் எது ?
8.இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது ?
9.இந்தியாவில் ஆட்சி மொழிகள் எந்தப்பட்டியலில் இடம்
பெற்றுள்ளது ?
10.இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார் ?
பதில்கள்:
1.மீரட்,2.பேனர்ஜி,3.பூமி தான் இயக்கம், 4.ஈசுவர சந்திர
வித்தியாசாகர், 5.போர்ட் பிளேயர், 6.ஹைதராபாத், 7.நாளந்தா,
8.1952, 9.எட்டாவது பட்டியல்,10.ஹர்லால் கானியா
இன்று டிசம்பர் 12
பெயர் : ரஜினிகாந்த் ,
பிறந்த தேதி : டிசம்பர் 12, 1949
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும்
சிவாஜி ராவ் காயக்வாட் ஒரு புகழ்பெற்ற தமிழ்த்
திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள்
மற்றும் அனைவரும் இவரை சூப்பர் ஸ்டார்
என்று அழைக்கின்றனர்.இவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
ReplyDelete@ nilaamathy
ReplyDeleteமிக்க நன்றி
Details regarding printing of Offset method
ReplyDelete@ R.Prakash Setti
ReplyDeleteநன்றி