பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, December 7, 2010

பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்

என்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி
மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்
விபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்
நம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்
சம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்
தகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4235" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

Agriculture முதல் Computer Science வரை , Arts and Humanities முதல்
Engineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்
கிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்
பல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு
உதவுவதற்காக இந்த தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wepapers.com

இந்ததளத்திற்கு சென்று எந்தத்துறையில் நாம் படிக்கிறோமோ அந்தத்
துறையை அல்லது எந்ததுறையைப்பற்றி விரிவான தகவல்கள்
வேண்டுமோ தேர்ந்தெடுத்துக்கொண்டு சொடுக்கவும் அடுத்து வரும்
திரையில் நாம் தேர்ந்தெடுத்தத் துறையில் பேராசிரியரின் கட்டுரைகள்
முதல் அந்த்துறைப்பற்றி உள்ள அத்தனை கட்டுரைகளும் எளிதாக
கிடைக்கும்.பிடிஎப் , வேர்டு , எக்சல், பவர்பாயிண்ட் என அனைத்து
வகையான கோப்புகளையும் இது தேடி கொடுக்கும் கூடவே நாம்
எந்தத்துறை என்று தெரியாவிட்டாலும் Search என்பதில் என்ன
வேண்டுமோ அதை கொடுத்தும் தேடலாம். இத்தளத்தில் நமக்கு
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் பிராஜெக்ட்
தகவல்களையும் பதிவேற்றம் செய்யலாம். பிராஜெக்ட் தகவல்கள்
அனைத்தையும் ஒரே இடத்தில் கொடுக்கும் இந்த்தளம் நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை
அனுபவசாலியின் முன் எடுபடாது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் முதல் பெண் டாக்டர் யார் ?
2.எந்த வைட்டமின் குறைபாடினால் மாலைக்கண் நோய்
எற்படுகிறது ?
3.தன்னமிக்கையை அதிகரிக்க என்ன பூ பயன்படுத்தப்படுகிறது ?
4.மழையின் அளவை கணக்கிடஉதவும் கருவியின் பெயர் என்ன?
5.திட்டக்கமிஷன் எப்போது துவக்கப்பட்டது ?
6.கருப்பு மான்கள் எவ்வளவு வேகத்தில் ஓடக்கூடியது ?
7.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப்பெண்மணி ?
8.கோழியின் உடலில் சராசரியா எத்தனை இறகுகள் உள்ளது?
9.கட்டின்ல் பிஷ் என்ற மீனுக்கு எத்தனை இதயம் உள்ளது ?
10.இங்கிலாந்தில் வெளியீட்ட முதல் அஞ்சல் தலை என்ன ?
பதில்கள்:
1.முத்துலெட்சுமி,2. வைட்டமின் ஏ,3.முல்லைப்பூ,
4.ரெயின் கேஜ், 5.1950, 6.1மணிக்கு 6.5 கி.மீ,
7.பச்சேர் திரிபால்,8.8 ஆயிரத்துக்கும் மேல், 9.மூன்று.
10.பென்னி பிளாக்.


இன்று டிசம்பர் 7 
பெயர் : நோம் சோம்சுக்கி ,
பிறந்ததேதி : டிசம்பர் 7, 1928
அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். பல
துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள்
தந்திருக்கின்றார். மொழியியல் துறையில்
தோற்றுவாய் இலக்கணம் (generative grammar)
என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். உள்ளம்,
அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத்
தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science)
என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. Thanks winmani

    it's really useful me .

    "அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை
    அனுபவசாலியின் முன் எடுபடாது."

    :-)

    ReplyDelete
  2. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. supr sir..........

    ReplyDelete
  4. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் பல அருமையான பதிவுகளை வழங்கியிருக்கிறீர்கள். தளராது தொடருங்கள் தங்கள் சேவையை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post Top Ad