அனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, December 9, 2010

அனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்

இலவசமாக கிடைப்பது டிப்ஸ் தான் என்று பல பேர் கூறினாலும் அந்த
டிப்ஸ் கூட எங்கு சென்று தேடுவது , எங்கு முழுமையாக கிடைக்கும்,
டிப்ஸ் மட்டுமல்ல ட்ரிக்ஸ்-ம் கூட , அனைத்து துறையில்
இருப்பவர்களுக்கும் டிப்ஸ் மற்றும்  ட்ரிக்ஸ் சொல்லிக் கொடுக்க ஒரு
தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



கூகுளில் சென்று தேடினால் கிடைக்காதது ஏதும் இல்லை என்று
சொல்லும் அளவிற்கு வந்தாலும் சில நேரங்களில் நாம் தேடும்
தகவல்கள் கிடைப்பதில்லை, உதாரணமாக பின்வரும் துறைகளில்
டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தேட வேண்டும் என்று வைத்துக்
கொள்வோம். Autos,Business,Careers & work, Computers & internet,
Education,Electronics , Family,Fashion, style & personal, care,Fitness,
Food & drink, Gambling, Health,Hobbies & games, Home & garden,
Legal, Music & dance,Outdoor,Parenting,Personal finance,Pets,
Self defense,Self improvement,Shopping,Socializing,Special events,
Sports,Travel,Video Games,
சரியான தேடல் முடிவு கிடைப்பதில்லை ,அப்படி கிடைத்தாலும்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளமாக சென்று தான் படிக்க வேண்டி
இருக்கிறது. டிப்ஸ் என்று சொன்னவுடன் நாம் கேட்பது இதை
யாரவது  இதற்கு முன் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று
இந்த கேள்விக்கும் பதிலாக அனுபவத்தில் கிடைக்கும் தகவல்களை
மட்டுமே பகிர்ந்து கொள்கிறது ஒரு தளம். யார் வேண்டுமானாலும்
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி தங்களுக்கு தெரிந்த டிப்ஸ்
மற்றும் ட்ரிக்ஸ்-ஐ பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://www.tipsbase.com

எந்தத்துறையில் இருந்தாலும் அனைவருக்கும் பயன்தரும் வகையில்
இந்ததளத்தில் பல டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் கிடைக்கிறது. டிப்ஸ் மற்றும்
ட்ரிக்ஸ் பற்றி தேடுபவர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
இறைவனிடம் அளவுகடந்த அன்பு வையுங்கள், அவர்
ஒரு போதும் நம்மை விட்டு செல்ல மாட்டார்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நாட்டை கிழக்கு பிரிட்டன் என்று அழைக்கிறோம் ?
2.ஒரு வருடம் வரை உணவில்லாமல் வாழும் உயிரினம் எது ?
3.நீயூட்ரானை கண்டுபிடித்தவர் யார் ?
4.உலகிலேயே நீளமான பாதள இரயில் பாதை எந்த நாட்டில்
 உள்ளது?
5.இந்திய தேசிய கீதம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?
6.அமெரிக்காவில் உள்ள சுதந்திர சிலையின் வாய்-ன் அகலம்
 என்ன ?
7.எரிமலையிலிருந்து வெளிவரும் தீக்குழம்புக்கு பெயர் என்ன?
8.ஒரு மின்னல் எவ்வளவு நேரம் மின்னுகிறது ?
9.முதன் முதலில் விமானத்தை போருக்கு உபயோகப்படுத்திய
 நாடு ?
10.பிறப்பு முதல் இறப்பு வரை எந்த உயிரினம் தண்ணீர்
 குடிப்பதில்லை ?
பதில்கள்:
1.ஜப்பான்,2.தேள்,3.சாட்விக், 4.லண்டன், 5.வங்காள மொழி,
6.3 அடி, 7.லாவா,8.0.1 வினாடி முதல் 1.6 வினாடி வரை,
9.இத்தாலி,10.பல்லி.


இன்று டிசம்பர் 9 
சிறப்பு நாள் : ஊழல் எதிர்ப்பு நாள்
செய்யும் வேலைக்கு லஞ்சமாக பணம்
வாங்குவதையும்
அரசாங்கத்தின் பணத்தை
ஏமாற்றி சுரண்டுவதை
குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காக

ஆரம்ப்பிக்ப்பட்டது தான் அனைத்துலக ஊழல்
எதிர்ப்பு நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad