சரிபார்க்கும் பட்டியல்(checklist) என்பது மிக முக்கியம். இதற்காக
நாம் Checklist ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தளமாக
சென்று தேட வேண்டாம் அனைத்து checklist -ம் ஒரே இடத்தில்
கொடுத்து உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Checklist என்பது தினசரி வாழ்க்கையில் அல்லது ஒரு துறையில்
முக்கியமான தேவையான சரி பார்க்கும் பட்டியலை நமக்கு
கொடுக்கிறது ஒரு துறையில் மட்டும் சரிபார்க்கும் பட்டியல் அல்ல
அனைத்து துறையில் இருப்பவருக்கும் ஒரு தளம் சரிபார்க்கும்
பட்டியல் கொடுத்து உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.simplychecklists.com
Business/Finances,Education,Emergencies/Storms,Family,Food/Pantry,
GreenLiving,Hobbies/Sports,Home,Jobs,Medical/First Aid,
Miscellaneous/OtherParties/Celebrations,Pets,Real Estate/Construction,
Technology/Electronics,Tools/WorkShop,Travel & Leisure,Vehicles
மேற்கண்ட அனைத்து துறையில் இருப்பவருக்கும் சரிபார்க்கும்
பட்டியல் கொடுக்கிறது. எந்தத் துறையில் பிஸினஸ் செய்வதாக
இருந்தாலும் அந்தத்துறைக்கு தேவையானவற்றை எளிதாகவும்
எதுவும் விடுபடாமலும் அறிந்து கொள்ள இந்தத்தளம் நமக்கு
உதவுகிறது பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைதேடுவோர்
என அனைவரும் தங்களுக்குத் தேவையான் Checklist- ம்
இங்கிருந்து தெரிந்தும் கொள்ளலாம். இந்ததகவல்களை PDF
கோப்பாக மாற்றி Print செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.
வின்மணி சிந்தனை
அம்பும் வார்த்தையும் இரண்டும் ஒன்று தான் இரண்டையுமே
எப்போதும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்திய தேசியசின்னத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை ?
2.Philately என்பது என்ன ?
3.முதன் முதலில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது ?
4.ஸ்வீடன் நாட்டின் தலைநகரம் என்ன ?
5.காந்தி திரைப்படத்தில் காந்தியாக நடித்தவரின் பெயர் என்ன?
6.உலகத்திலே தகரம் அதிகமாக உற்பத்தியாகும் நாடு எது ?
7.Mycology என்பது என்ன ?
8.செம்பு என்ற உலோகத்தின் பெயரால் அமைந்துள்ள நாடு ?
9.ஐ.நா.சபையின் தலைவராக இருந்த முதல் பெண்மணி யார்?
10.சிக்கிம் தலைநகர் எது ?
பதில்கள்:
1.நான்கு,2.அஞ்சற்றலைகள் சேகரித்தல்,3.1945,
4.ஸ்டாக் ஹோம், 5.பென் கிங்ஸ்லி,6.சைப்ரஸ்,
7.காளான்களைப் பற்றிய இயல், 8.சைப்ரஸ்.
9.பண்டிட் விஜயலெட்சுமி,,10.கேங்டாக்.
இன்று டிசம்பர் 26
பெயர் :சார்ல்ஸ் பாபேஜ்,
பிறந்ததேதி : டிசம்பர் 26, 1791
பிரிட்டானிய கணிதவியலாளர்,கண்டுபிடிப்பாளர்.
இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர
கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.
1991 இல் பிரிட்டானிய விஞ்ஞானிகள் இவர்
திட்டமிட்டபடி difference engine இனை வடிவமைத்தனர்.
அது சரியாக இயங்கியமை இவரது திறமையை
நிரூபித்தது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
தங்களது வலைப்பூவில் உள்ளது போல் "மறுமொழி இடுக" பகுதியினை எனது வலைப்பூவில் இணைப்பது எப்படி சொல்ல இயலுமா? வின்மணியாரே..... நன்றி.
ReplyDelete@ துரை.வேலுமணி
ReplyDeleteதங்கள் வலைப்பூ பற்றிய எந்த தகவலும் கொடுக்காமல் கேட்டால் எப்படி சொல்வது.
முழுவிபரமும் கொடுங்கள்.
நன்றி
இத்தளத்தின் பயன் என்ன என்பது புரியவில்லை. விளக்குங்களேன்...
ReplyDelete@ dev
ReplyDeleteநண்பருக்கு ,
உதாரணமாக நீங்கள் கல்லூரிக்கு செல்வதென்றால் ’ஏதெல்லாம் தேவை ‘ எதெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும் நீங்கள் கல்லூரி நிறுவனராக இருந்தால் எதெல்லாம் அவசியம்
என்பதற்காக ஒரு பட்டியலை கொடுக்கிறது இந்ததளம். இப்போது இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
நன்றி
மிகவும் உபயோகமானது மிக்க நன்றி!
ReplyDelete@ எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி
"விண்மணி" நண்பருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அறிவும், திறமையும் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையும் கொண்ட உங்கள் வெற்றியின் பயணம் மேலும் மேலும் தொடரட்டும்..
ReplyDelete@ Life Direction NBetwork
ReplyDeleteமிக்க நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.