மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 22, 2010

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்

நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ்,
போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)
டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4386" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

வன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில்
சென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி
ஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே
தளத்தில் இருந்து BIOS , Bluetooth , Camcorder , Card Reader-Writer
Digital Cameras, Laptop , Modems , Monitor , Motherboard,
TV Tuner / Card , UPS , USB , Printer போன்ற அனைத்து
வன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின்
டிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.nodevice.com

இந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த
வன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து
Find என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில்
இண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல்
தேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின்
டிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும் இந்தத்தளம் அனைத்து
மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
கடவுளைத் தேடி செல்லும் மக்களுக்கு சோதனை வந்தாலும்
நிரந்தர வெற்றி விரைவில் கிடைக்கும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.தேசிய வேதியல் ஆராய்ச்சி கூடம் எங்குள்ளது ?
3.கோபார்காஸ் பிளான்ட்டில் உற்பத்தியாகும் வாயு ?
4.மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்தியாவின் பழமையான
தொழில் ?
5.காலா ஸார் என்ற நோயைப் பரப்புவது எது ?
6.இரத்தப்பிரிவுகளில் Universal Donor என்று அழைக்கப்படுவது?
7.உடலில் சிறுநீரகம் செய்யும் பணி என்ன ?
8.இந்தியாவிலே மிகச்சிறிய மாநிலம் எது ?
9.ஆனந்த மடம் என்ற நூலை எழுதியவர் யார் ?
10.தன் கூட்டைத் தானே கட்டிக்கொள்ளாத பறவை எது ?
பதில்கள்:
1.ஹோவே,2.பூனே,3.மீதேன், 4.நெசவுத்தொழில்,
5.ஈ,6.O பிரிவு, 7.ரத்தத்தை தூய்மையாக்குவது,
8.சிக்கிம், 9.பக்கிம் சந்திர சாட்டர்ஜி,10.கக்கூ.



இன்று டிசம்பர் 22 
பெயர் : இராமானுஜர்
பிறந்த தேதி : டிசம்பர் 22, 1887

உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும்
கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள
ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918
முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும்
அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
உங்களால் பாரததேசத்திற்க்கே பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

13 comments:

  1. தமிழின்December 26, 2010 at 12:42 PM

    அவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை. இந்தியாவுக்கு இல்லை ஏன் என்றல் அவர் தமிழர்.

    ReplyDelete
  2. நன்றி. மிகவும் உபயோகமான தகவல்கள்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு..!! நன்றி..!!

    ReplyDelete
  4. @ தமிழின்
    தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது, தயவு செய்து நம் தேசங்களை பிரித்த்து கூறாதீர்கள்.
    நன்றி

    ReplyDelete
  5. @ எம்.கே.முருகானந்தன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. Good deed..pl continue winmani....

    ReplyDelete
  7. @ salemdeva
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. @ athikesavans
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  10. மிக மிகப் பயனுள்ள பதிவுங்க வின்மணி. சில டிரைவர்களுக்காக நான் பல வலைப்பக்கங்களில் தேடி அலைந்திருக்கிறேன். பலரின் தேடுதல் பணியை எளிதாக்கி விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  11. @ மாணவன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. @ Thanigasalam
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad