நமக்கு உதவுவது Remainder Note தான் என்றாலும் பல நேரங்களில்
எழுதி வைக்க நேரமில்லை , சில நேரங்களில் எழுதிவைத்ததை
படிக்க நேரமில்லை என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அந்த
வேலையை பற்றிய விபரங்களை அந்தந்த நாளில் நமக்கு இமெயிலில்
தெரிவிக்க ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://pleasenotify.me
” தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்து “ இது தான் இணையதளத்தின்
பெயர். இந்ததளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியினை
கொடுத்து என்ன வேலை எந்த நாள் செய்ய வேண்டும் என்பதையும்
வேலை பற்றிய விபரங்களையும் தட்டச்சு செய்து எந்த இமெயில்
முகவரிக்கு ஞாபகப்படுத்த வேண்டுமோ அந்த இமெயில் முகவரியும்
கொடுத்து Send என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அருகிலே
Email -லில் எப்படி வரும் என்பதற்கான Preview -ம் கொடுக்கின்றனர்
எளிமையான முகப்பு பக்கத்தை கொண்டு வலம் வருகிறது.
இப்போது நாம் யாரிடம் பேசினாலும் எனக்கு இமெயிலில் ஒருமுறை
ஞாபகப்படுத்து என்று கூறும் அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மரியாதையை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மறக்காமல்
சொல்லி கொடுக்க வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆப்பிள் செயற்கைக் கோள் எந்த ஆண்டு விண் வெளியில்
ஏவப்பட்டது ?
2.100 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு நின்று போன
நாளேடு எது?
3.மெஸ்மரிசத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.தேனின் வேறு பெயர் என்ன ?
5.நகம் வெட்டும் போது ஏன் வலிப்பதில்லை ?
6.தமிழில் தோன்றிய முதல் நாவல் பெயர் என்ன ?
7.மந்த வாயூவுக்கு இன்னொரு பெயர் என்ன ?
8.கம்யூனிஸ்டுகளின் பைபிள் என்று கூறப்படும் நூல் எது ?
9.நான்காம் எஸ்டேட் என்பது என்ன ?
10.மலேரியாவைப் பரப்பும் ஒருவகை கொசுவின் பெயர் என்ன ?
பதில்கள்:
1.1981,2.The Mail,3.மெஸ்மர், 4.கொங்கு,
5.நரம்பு மண்டலத்துடன் தொடர்பு இல்லை,6.மாயூரம்,
7.ஹீலியம், 8.மூலதனம், 9.பத்திரிகைகள்,10.அனோபிலிஸ்.
இன்று டிசம்பர் 23
பெயர் : பி. வி. நரசிம்ம ராவ்
மறைந்த தேதி : டிசம்பர் 23, 2004
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர். ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.தென்
இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப்
பிரதமர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ்,
1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்
பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
மிக அருமை! நன்றி!
ReplyDelete@ எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி
How it is better than google calendar which gives multiple reminder option including SMS?
ReplyDeletePlease explain
@ mukunth
ReplyDeleteகூகிள் கொடுக்கும் சலுகைகள் முன் இது ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும் எளிமையாக யார் வேண்டுமானாலும் எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் ரீமைண்டர் செய்து வைக்கலாம் என்பது தான் இதன் சிறப்பு.
நன்றி