LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, December 25, 2010

LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

LCD மானிட்டர் வாங்கும் போது அதன் வாரண்டி முடியும் முன்பும்
நாம் நம் LCD மானிட்டரின் திரையின் பிக்சல் பழுதில்லாமல்
இயங்குகிறதா என்று சரிபார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4414" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

LCD மானிட்டர் பயன்படுத்தும் போது சில நேரங்களில் திரையில்
சில பிக்சல் சரியாக தெரியாமல் இருக்கலாம் இல்லை என்றால்
சில வண்ணங்கள் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கலாம் இந்தப்
பிரச்சினை புது LCD மானிட்டர் வாங்குவதில் இருந்து தொடங்குகிறது.
புதிய LCD மானிட்டர் வாங்குபவர்கள் அதற்கு முன் மானிட்டரில்
ஏதும் பிக்சல் பிரச்சினை இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடித்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://flexcode.org/lcd.html

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Pick a color
என்பதில் விரும்பும் வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து அதன் அருகில் இருக்கும் toggle full screen என்ற பொத்தானை
அழுத்தினால் முழுத்திரையில் நாம் தேர்ந்தெடுத்த கலர் இருக்கும்
வண்ணத்தில் அல்லது மானிட்டரில் பிரச்சினை இருந்தால்
பிரச்சினை உள்ள பகுதியின் பிக்சல் மட்டும் வேறு கலரில்
இருக்கும். இதிலிருந்து எளிதாக கண்டுபிடிக்கலாம். LCD மானிட்டர்
வாங்கி இன்னும் சில மாதங்களில் வாரண்டி முடிவதாக
இருந்தால் நாம் கண்டிப்பாக இந்ததளத்திற்கு சென்று நம்
LCD -ல் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
கண்டிப்பாக இந்தப்பதிவு LCD மானிட்டர் பயன்படுத்தும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
ஆபத்தில் இருப்பவருக்கு நாம் உதவினால் நமக்கு
ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் உதவுவான்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆங்கிலக் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
 யார் ?

2.வெறி நாய்க்கு மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.தீயை அனைப்பதற்கு எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது ?
4.அட்ரீனல் சுரப்பி என்பது எந்த வகை சுரப்பி ?
5.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு ?
6.உலகிலேயே அதிகம் மழை பொழியும் நகரம் எந்த
மாநிலத்தில் உள்ளது ?

7.துறுவங்களில் ஒரு பகல் பொழுதின் கால அளவு ?
8.இரட்டையாட்சி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது ?
9.உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு எது ?
10.சத்ரபதி சிவாஜி பூஜித்த தேவமாதா யார் ?
பதில்கள்:
1.மெக்காலே,2.லூயி பாஸ்ச்சர்,3.கார்பன் -டை- ஆக்சைடு,
4.நாளமில்லா சுரப்பி, 5.கியூபா,6.சிரபுஞ்சி , மேகாலயா,
7.ஆறு மாதங்கள், 8.1919, 9.இந்தியா,10.அன்னை பவானி.



இன்று டிசம்பர் 25 
பெயர் :  ராணி வேலுநாச்சியார்,
மறைந்ததேதி : டிசம்பர் 25, 1796
வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம்
நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த
இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப்
போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. Very usefull informations...

    all your postings are very use full to all computer user/others

    ReplyDelete
  2. @ RK
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.

    ReplyDelete
  4. @ ஜெகதீஸ்வரன்
    நண்பருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad