நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, December 6, 2010

நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம்

ஒரு நிறுவனத்தின் அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு மிக
முக்கியமானது லோகோ தான். இந்த லோகோவை நாம் உருவாக்கும்
இணையதளத்திற்கும் நம் நிறுவனத்திற்கும் வைக்கலாம் எந்த
மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக ஆன்லைன் மூலம்
நம் விருப்பப்படி லோகோ (Logo) உருவாக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4221" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

மிகப்பிரம்மாண்டமான எந்த மென்பொருளும் இல்லாமல் எளிதாக
அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் நம் விருப்பப்படி லோகோ
ஆன்லைன் மூலம் உருவாக்கிக்கொடுக்க ஒரு இணையதளம்
நமக்கு உதவுகிறது.

இணையதள முகவரி : www.logoease.com

[caption id="attachment_4222" align="aligncenter" width="392" caption="படம் 2"][/caption]

இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் Start your logo
என்ற பொத்தானை அழுத்தவும் அடுத்தும் வரை திரை படம்-2 ல்
காட்டப்பட்டுள்ளது இதில் Choose என்ற பொத்தானை அழுத்தி எந்தத்
துறை சம்பந்தமாக லோகோ உருவாக்க வேண்டுமோ அந்ததுறையை
தேர்ந்தெடுத்து அதில் இருந்து நமக்கு பிடித்த படத்தை சொடுக்கியதும்
அடுத்து வரும் திரையில் நாம் லோகோவை நம் விருப்பப்படி எடிட்
செய்து கொள்ளலாம். லோகோவை எப்படி உருவாக்கலாம் என்ற
வீடியோவை இத்துடன் இணைத்துள்ளோம்.







நம் விருப்பப்படி எளிமையாக லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
மாதத்திற்கு ஒரு நாள் மவுனமாக இருக்கப்பழகிக்
கொண்டால் மனம் எளிதாக அமைதி பெறும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் முதல் நூலகம் எது ?
2.உலகில் தொலைக்காட்சி தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது
 எந்த நாடு ?
3.பிரான்ஸ் நாணயத்தின் பெயர் என்ன ?
4.உலகில் நிக்கல் தாது அதிகமாக கிடைக்கும் இடம் எது ?
5.பிரெஞ்சு நாட்டின் தேசிய மலர் எது ?
6.சப்தம் போடாத மிருகம் எது ?
7.முட்டையில் இல்லாத சத்து எது ?
8.டைப்ரைட்டரை கண்டுபிடித்தவர் யார் ?
9.எந்த நிறம் வெப்பத்தை குறைவாக கிரகிக்கும் ?
10.பருத்தி பயிரிட சிறந்த மண் எது ?
பதில்கள்:
1.வில்லியம் கேரே,2.அமெரிக்கா,3.பிராஸ், 4.கனடா,
5.லில்லி, 6.ஓட்டகச்சிவங்கி,7.கொழுப்பு,8.சோபாஸ்,
9.வெள்ளை நிறம்.10.கரிசல் மண்.


இன்று டிசம்பர் 6 
பெயர் : அம்பேத்கர் ,
மறைந்ததேதி : டிசம்பர் 6, 1956
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான
போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம்,
சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும்
ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும்
என்று போராடினார்.இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின்
முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல்
சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad