கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 15, 2011

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

கூகிள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியில்
நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம்
பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4703" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension.    Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம்.  இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது  Download என்பதை  குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.

தரவிரக்க முகவரி :  Download


இந்தத்தளத்திற்கு சென்று நாம் Install  என்ற பொத்தானை சொடுக்கி
நிறுவிக்கொள்ள வேண்டும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Tools
என்பதை தேர்ந்தெடுத்து அதில் Extension என்பதை சொடுக்கி
வரும் திரையில் simple startup password  என்பதில் Options என்பதை
சொடுக்கி பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். அடுத்த முறை
நாம் கூகுள் குரோம் உலாவியை திறக்கும் போது பாஸ்வேர்ட்
கேட்கும் இதில் சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான்
நுழையமுடியும். கண்டிப்பாக இந்தப்பதிவு பெற்றோர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
விரதம் இருப்பது நம் உடலில் இருக்கும் இயந்திரங்கள்
வெகு நாட்கள் பழுதில்லாமல் இயங்க உதவும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வால்ட் டிஸ்னியின் மறுபெயர் என்ன ?
2.டைட்டானிக் படம் தயாரிக்க ஆன செலவு ?
3.சூரியக்கதிரில் இருந்து கிடைக்கும் வைட்டமின் எது ?
4.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
5.கடல் நீரில் உப்பின் அளவு என்ன ?
6.மழைத்துளியின் கனம் என்ன ?
7.ஜெயங்கொண்டார் எழுதிய நூலின் பெயர் என்ன ?
8.சீன மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளது ?
9.பாரீசுக்கு போ என்ற நாவலை எழுதியது யார் ?
10.சத்யஜித்ரேயின் முதல் படம் எது ?
பதில்கள்:
1.கார்ட்டூன் சினிமாவின் தந்தை,2. 800 கோடி,3.வைட்டமின் டி,
4.அமோனியா,5.78 சதவீதம்,6.சுமார் 0.2 கிராம்,
7.கலிங்கத்துப்பரணி, 8.1500 எழுத்துக்கள்.9.ஜெயகாந்தன்,
10.பதேர் பாஞ்சாலி.



இன்று ஜனவரி 16
பெயர் : ராபர்ட்ஜெ.வான்டிகிராப்,
மறைந்த தேதி : ஜனவரி 16,1967
இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்
பேராசிரியராகப் பணிபுரிந்தார்.வான்டிகிராப்
மின்னியற்றி என்னும் இயந்திரத்தை
உருவாக்கியவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. மிக்க நன்றி சார்! பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  2. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad