எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, January 23, 2011

எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.

எந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக
ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4775" align="aligncenter" width="455" caption="படம் 1"][/caption]

வீடியோ மெயில் அனுப்பவது எப்படி என்று பல இமெயில்கள்
நமக்கு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்று
ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பவது எப்படி
என்று பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.eyejot.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம்  தளத்தின் முகப்பில் இருக்கும்
Join now என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொள்ளவும். நம் பயனாளர் முகவரியை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு  எந்த மென்பொருளும்
இல்லாமல் நம் உலாவி மூலம் வீடியோ இமெயில்
அனுப்பலாம். ஆன்லைன் -ல் வீடியோ சாட் செய்ய விரும்பும்
நபர்களுக்கும் இந்த்தளம் பயனுள்ளதாக இருக்கும்.Download
and save வீடியோ என்பதை சொடுக்கி வீடியோவை நம்
கணினியில் சேமிக்கலாம். பிரபலமாக உள்ள அனைத்து
மொபைல் போன்களிலும் நாம் இந்த வீடியோவைப் பார்க்கலாம்.
பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தற்போது வீடியோ
சாட் பயன்படுத்தி இண்டெர்வியூ நடத்துகின்றனர். வெளிநாட்டில்
இருப்பவர்கள் எந்த மென்பொருளும் இல்லாமல் வீடியோ
சாட் செய்யும் இந்த முறையை தற்போது பயன்படுத்துகின்றனர்.
கண்டிப்பாக அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.



வின்மணி சிந்தனை
லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி பணத்தோடு நோயையும்
பாவத்தையும் சேர்த்து வாங்குகிறார், நல்ல நேரம் முடிந்ததும்
அதை அனுபவிப்பார்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த ஆண்டு இந்தியா சீனா பஞ்சசீலக்கொள்கை உடன்பாடு
 ஏற்பட்டது ?
2.சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் எந்த ஆண்டு
 நடைபெற்றது ? 
3.சைமன் குழு அறிக்கை எந்த ஆண்டு வெளிவந்தது ?
4.சட்டமறுப்பு இயக்கம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
5.லக்னோ உடன்படிக்கை எந்த ஆண்டு ஏற்பட்டது ?
6.இங்கிலாந்தில் கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு
 நிறுவப்பட்டது ?
7.சாதிக்குறைபாடுகள் நீக்கும் சட்டம் எந்த ஆண்டு வந்தது ?
8.விதவைகள் மறுமணச்சட்டம் எந்த ஆண்டு வந்தது ?
9.மெட்ரிக் நடைமுறை எந்த ஆண்டு வந்தது ?
10.தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம்  எந்த ஆண்டு வந்தது ?
பதில்கள்:
1.1954,2.1952,3.1930,4.1932, 5.1916,6.1805,
7.1850,8.1856.9.1870, 10.1904.



இன்று  ஜனவரி 23 
பெயர் : இராமலிங்க அடிகள்,
மறைந்த தேதி : ஜனவரி 23,1873
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க
அடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார்.
மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தவர்.
சன்மார்க்க சிந்தனையாளர்.அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு
தனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது
வேகமாக உலகெங்கும் பரவிவருகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. மிக அருமையான பயனுள்ள பதிவு.மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  2. @ puliyuran raja
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கே தகவலுக்கு ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  4. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. Mohamed Subuhan, Saudi ArabiaFebruary 10, 2011 at 2:26 AM

    Dear Sir,

    Very useful tips and info. Please keep up your good works.
    With regards and prayers.
    Your brother Subuhan

    ReplyDelete

Post Top Ad