உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, January 27, 2011

உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.

விமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி
விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில்
என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்லி நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4812" align="aligncenter" width="446" caption="படம் 1"][/caption]

எந்த நிறுவனத்தின் விமானத்தில் எந்த வகை உணவு கிடைக்கும்
அதற்கு ஆகும் செலவு என்ன என்பதை துல்லியமாக சொல்லி
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.airlinemeals.net

இந்ததளத்திற்கு சென்று எந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணம்
செய்யப்போகிறோமோ அந்த விமானத்தை தேர்ந்தெடுத்துகொண்டால்
மட்டும் போதும் அடுத்து வரும் திரையில் அந்த விமானத்தில்
என்ன வகை உணவெல்லாம் கிடைக்கும் என்பதை நமக்கு
பட்டியலிட்டு காட்டும் மொத்தமாக 500 airlines -ல் என்ன வகை
உணவு கிடைக்கும் என்று எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
வெஜிடேரியன் வகை சாப்பாடு, குழந்தைகளுக்கான உணவு,
நோயாளிகளுக்கான உணவு , நாம் பயணம் செய்யும் விமானத்தில்
கிடைக்குமா கிடைக்காத என்று தேடும் நம்மவர்களுக்கு இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
அடுத்தவர் நமக்கு செய்த நன்றியை ஒருபோதும் நாம் மறக்க
கூடாது. செய் நன்றிக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அமிர்தசரஸ் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு ?
2.வங்காள நீதித்துறைச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
3.குற்றவியில் சட்டத்தொகுப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு ?
4.பெனாரஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
5.ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு எது ?
6.முதல் இரட்டையாட்சி முறை வந்த ஆண்டு ?
7.இந்திய உயர் ஆணையரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
8.பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு ?
9.ரிப்பன் பிரபு இங்கிலாந்தில் எந்த கட்சியைச் சேர்ந்தவர் ?
10.எந்த ஆண்டு லக்னோ உடன்படிக்கை தயாரிக்கப்பட்டது ?
பதில்கள்:
1.1809, 2.1781,3.1861,4.1772, 5.1950, 6.1919,
7.6 ஆண்டுகள்,8.1966, 9.லிபரல் காட்சி, 10.  1910.



இன்று ஜனவரி 27
பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன்
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும்
ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை
உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான
வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று
தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு
சொந்தகாரர்.தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு
செய்துள்ளார் எடிசன்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. Can I just say what a reduction to search out somebody who really knows what theyre speaking about on the internet. You definitely know the way to bring a problem to mild and make it important. More folks need to learn this and understand this side of the story. I cant believe youre not more popular because you positively have the gift.

    ReplyDelete
  2. @ tranzystor do vp30
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad