வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை
Duplicate ஆக வந்தால் நீக்கிவிட வேண்டும், எல்லமே சிறிய
எழுத்தாக (Lowercase) ஆக வரவேண்டும் இன்னும் இப்படி
நமக்கு கோப்பில் தேவைப்படும் அனைத்து வேலைகளையும்
எளிதாக செய்ய ஒரு தளம் நமக்கு உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
[caption id="attachment_4859" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருள் கொண்டு எளிதாக செய்ய
வேண்டிய வேலைக்கு எதற்காக இப்படி ஒரு இணையதளம்
என்று பார்த்தால் மைக்ரோசாப்ட் வேர்டில் மூன்று அல்லது
நான்கு முறை செய்ய வேண்டியதை இங்கு ஒரே முறையில்
செய்யலாம். நமக்கு உதவுவதற்காக இந்தத்தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://alphabetizer.flap.tv/index.php
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம்
இருப்பதில் என்ன ஆப்சன் தேவையோ அதை தேர்ந்தெடுத்துவிட்டு
Alphabetize என்ற பொத்தானை சொடுக்கி உடனடியாக மாற்றலாம்.
ஓவ்வொரு வார்த்தை தொடங்கும் முன்னும் பின்னும் என்ன
கொடுக்க வேண்டும் என்பதை கொடுத்தும் மாற்றுவது இதன்
கூடுதல் சிறப்பு. வார்த்தைக்கு பின் Comma கொடுப்பதில் இருந்து
New line உருவாக்குவது வரை அனைத்துமே எளிதாக இருக்கிறது.
கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
காலத்தில் செய்யப்படும் சிறிய உதவியினால் ஒரு மனிதனுக்கு
வாழ்வில் பெரிய வெற்றி கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வோல்ட்டேஜ் வேறுபாடுகளை அளக்க உதவும் கருவி எது ?
2.திரவங்களின் அடர்த்தையை அளக்க உதவும் கருவி எது ?
3.சுழ்நிலை அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது ?
4.வாயுப்பொருட்களின் அடர்த்தி அளவை தீர்மானிக்கும்
கருவி எது ?
5.காது கேளாத்தன்மையை நிவர்த்தி செய்யும் கருவி எது ?
6.வண்ணங்களை ஆராயும் போது அவற்றின் தீவிரத்தை ஒப்பிட
உதவும் கருவி எது ?
7.விமானங்களால் உயரத்தை அளக்கும் கருவி எது ?
8.திரையின் மீது திரைப்படங்களை தோன்றச்செய்யும் கருவி எது?
9.காந்த அலைவீச்சுகளின் அளவீடுகளை அளக்க உதவும்
கருவி எது ?
10.சவ்வூடு பரவலின் அழுத்தங்களை அளக்க உதவும் கருவி எது?
பதில்கள்:
1.எலக்ட்ரோ மீட்டர், 2.ஹைட்ரோ மீட்டர்,3.பராமீட்டர்,
4.டேசி மீட்டர்,5.ஆடியோபோன்,6.கலரி மீட்டர்,7.ஆல்டிமீட்டர்,
8.எபிடியாஸ்கோப். 9.ம்லக்கர்ஸ் மீட்டர் 10.ஆஸ்மோமீட்டர்.
இன்று ஜனவரி 30
பெயர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,
பிறந்த தேதி : ஜனவரி 30, 1869
மகாத்மா காந்தி என்று இந்திய மக்களால்
அன்போடு அழைக்கப்படுகிறார்.இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியவர்.சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட
இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி
வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.இந்தியாவின் தேசத்தந்தையை
மரியாதையுடன் வணங்குகிறோம்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment