உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 15, 2011

உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

தினமும் தோன்றும் பலவிதமான ஐடியாக்களை அப்படியே எளிதாக
MIndMap ஆக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4694" align="aligncenter" width="229" caption="படம் 1"][/caption]

உலகில் பிறந்த அனைவருக்கும் ஐடியா என்பது எப்போதும் வந்து
கொண்டே இருக்கும், அப்படி வரும் ஐடியாக்களில் சிலவற்றை
மட்டும் தான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருப்போம் பல ஐடியாக்கள்
சில நாட்களில் அல்லது மாதங்களில் காணமால் போகும். ஆனால்
இப்படி நமக்கு தோன்றும் ஐடியாக்களை உடனுக்குடன் ஆன்லைன்
மூலம் எளிதான MindMap ஆக மாற்றி சேமிக்கலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.text2mindmap.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நமக்கு
தோன்றும் ஐடியாக்கள் மற்றும் செய்ய வேண்டிய செயல்களை
எழுத்தாக தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை
எல்லாம் தட்டச்சு செய்து முடித்தபின் Convert to MindMap என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக வலது பக்கத்தில்
நாம் கொடுத்த Text -க்கு தகுந்தபடி அழகான MindMap உருவாக்கப்
பட்டிருக்கும்.  வலது பக்கத்தின் ஓரத்தில் இருக்கும் Controls என்பதை
சொடுக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
தங்கள் இலக்கை அடைய இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்



வின்மணி சிந்தனை
ஆண்டவன் கொடுக்கும் தொடர் தோல்வி அவன் நமக்கு
வைக்கும் உயர்ந்த பரீட்சை.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ரஷ்ய பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
2.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு எது ?
3.சூயஸ் கால்வாய் எந்த ஆண்டு திறக்கப்பட்டது ?
4.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
5.அகில உலக நீதி மன்றம் எங்குள்ளது ?
6.பொது மன்னிப்பு சபையின் தலமையிடம் எது ?
7.நமது உடலின் செல்களில் உள்ள உயிர்ப்பொருள் எது ?
8.பறக்கும் சீக்கியர் என்ற புகழப்பட்ட இந்திய வீரர் யார் ?
9.அடுத்த சூரிய கிரகணம் இனி எந்த ஆண்டு ஏற்படும் ?
10.தென்கொரியா சுதந்திர நாள் எப்போது ?
பதில்கள்:
1.சுப்ரீம் சோவியத்,2.கி.மு. 4,3.1869,  4.பாலைவனம்,
5.ஹாலந்து, 6.லண்டன்,7.புரோட்டோ பிளாசம், 8.மில்கா சிங்.
9.2020, 10.ஆகஸ்ட் 15.



இன்று ஜனவரி 15 
பெயர் : தேவநேயப் பாவாணர்,
மறைந்த தேதி : ஜனவரி 15, 1981
மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி
வல்லுனரும் ஆவார்.40க்கும் மேலான
மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய
சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.
இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும்
கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று
அழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப்
பாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

Post Top Ad