விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம். - Winmani

winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Post Top Ad

Sunday, January 2, 2011

விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம்.

பெரிய மென்பொருள்கள் துணை இல்லாமல் எளிதாக
ஆன்லைன் மூலம் எளிதாக ஃபை சார்ட் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

piecolor

கல்லூரியில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் இருந்து, பிஸினஸ்
செய்யும் தொழிலதிபர்கள் தங்களின் பிராக்ஜெட் ரிப்போட் மாதம்
அல்லது வருடம் வாரிய தயாரித்து அதை Pie Chart -ல் பார்க்க
விரும்புபவர்கள் எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://piecolor.com/

இந்தத்தளத்திற்கு சென்று எத்தனையாக பிரிக்க வேண்டுமோ அந்த
எண்ணை கொடுத்து நுழைந்து எந்த பிரிவுக்கு எந்த colors, size, titles.
போன்றவற்றை கொடுத்து எளிதாக சில நிமிடங்களில் Pie Chart
உருவாக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
தங்களுக்கு தேவையான துறையில் எளிதாக சில நிமிடங்களில்
Pie Chart உருவாக்கலாம் இதற்கு எந்தவிதமான பயனாளர் கணக்கும்
தேவையில்லை.


வின்மணி சிந்தனை
தோல்விதான் நம் மனதை பெரிய வெற்றி கிடைக்க
வழி வகை செய்கிறது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதத்தின் தேசிய மலர் எது ?
2.ஒரிஸ்ஸா தலைநகர் எது ?
3.உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி எது ?
4.இந்தியா சீனா எல்லைக்கோட்டுக்கு என்ன பெயர் ?
5.உலகிலேயே அதிக இரும்பு உற்பத்தி செய்யப்படும் நாடு ?
6.ஜெட் விமானத்தில் லண்டனில் இருந்து நீயூயார்க் செல்ல
 எவ்வளவு நேரம் ஆகும் ?
7.ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ?
8.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
9.புயல் கடல் என்பது எங்குள்ளது ?
10.உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை எங்குள்ளது ?
பதில்கள்:
1.தாமரை,2.புவனேஸ்வர்,3.சீன மொழி,4.மக்மோகன் லைன்,
5.ஐக்கிய அமெரிக்கா,6.7 மணி நேரம், 7.மதுரை,
8.33 மைல்கள்.9.சந்திரனில், 10.பாரிஸ்.


இன்று ஜனவரி 2 srinivasan
பெயர் : ஸ்ரீனிவாச வரதன்
பிறந்த தேதி : ஜனவரி 2, 1940
2007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள்
கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக்
கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று
மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும்
நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு
அறிவிக்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்pdf

1 comment:

Post Top Ad