நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, January 31, 2011

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.

சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4870" align="aligncenter" width="376" caption="படம் 1"][/caption]

சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : Download

இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில்  *#06#  என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


வின்மணி சிந்தனை
உலகத்திற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் தான் நாம்,
விருந்தாளிகளாக பூமிக்கு வந்து அடுத்தவருடன் சண்டை
போடக்கூடாது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஸ்பெயின் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
2.போலந்து நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ? 
3. அமெரிக்கா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
4.இந்திய நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர்  ?
5.ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
6.இஸ்ரேல் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
7.நார்வே நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர்  ?
8.சீனா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
9.பூடான் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
10.கனடா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் ?
பதில்கள்:
1.கோர்ட்ஸ், 2.சீஜிம்,3.காங்கிரஸ்,
4.லோக்சபா ராஜ்யசபா,5.டயட்,6.நெசட்,7.ஸ்டோர்டிங்,
8.தேசிய மக்கள் காங்கிரஸ். 9.சாங்டு, 10.மக்கள் சபை.


இன்று ஜனவரி 31
பெயர் : எம்.பக்தவத்சலம்,
மறைந்ததேதி : ஜனவரி 31,  1987
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும்
ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில்
அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற
இன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை
திறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம்.
இந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன்
வணங்குகிறோம்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

19 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல்தான்!

    ReplyDelete
  2. //எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
    நம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI
    எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI //
    நண்பரே,
    நமது மொபைல் lock ஆகி இருக்கும் நிலையில் மேற் குறிபிட்ட முறையில் நமது மொபைலின் IME எண்ணை கண்டறிய முடியாதே? IME எண்ணை கண்டறிய வேறு வழி முறை உண்டா?

    ReplyDelete
  3. @ ஸிராஜ்
    சரி தான் , இப்பவே IMEI எண் கண்டுபிடிச்சு உங்க டைரியில எழுதி வச்சுருங்க,
    இப்ப ஒகேவா ?
    -நன்றி

    ReplyDelete
  4. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. ஆஹா மிக பயனுள்ள பதிவு....

    மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  6. @ முத்துவேல்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. ரொம்ப உபயோகமாக இருந்தது. லேட்டஸ்ட் ஆக வரும் சாப்ட்வேர் உடனே தெரிந்துகொள்ளமுடிகிறது.அதை உபயோகிக்கிற முறையும் தெளிவாக நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு அமைகிறது. மிகவும் நன்றி

    ReplyDelete
  8. @ vidhyahari
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. ஒரே நெட்வொர்க் மட்டும் வேலைசெய்யும் போனில் மற்ற நெட்வொர்க்கும் வேலைசெய்யும் வகையில் சாப்ட்வேர் கிடைத்தால் நன்றா இருக்கும்.

    ReplyDelete
  10. @ kulam
    தேடிப்பார்த்து விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

    ReplyDelete
  11. Some of the net work not in this software, for an example if you select Canada, this software only contain 3 networks, but there are many, where we can find them, also there are not every phone model in this software, how can we resolve this issue in this software????

    ReplyDelete
  12. //நம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI
    எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
    என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
    என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
    Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்//

    நண்பரே
    நிறைய நம்பர் கிடைகிறது இதில் எந்த நம்பரை enter செய்வது என்று தெரியவில்லை?
    #pw+845 551 761 315 277+1#

    ReplyDelete
  13. @ Nalim
    நண்பருக்கு ,
    இந்த மென்பொருள் விரைவில் பல நாடுகளில் இருக்கும் அனைத்து நெட்வொர்க்-ம் துணை செய்யும் படி வர இருக்கிறது, அப்போது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

    ReplyDelete
  14. @ sudhakar
    மொபைல் மாடல்களுக்கு தகுந்தபடி வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கிறது, வரிசைப்படி
    மேலிருந்து கொடுத்துபாருங்கள். எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், சில நேரங்களில்
    பிழை செய்தி வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் வரிசையாக நிறைய எண்கள் கொடுத்திருக்கின்றனர். நாம் குறிப்பிட்ட நோக்கியா மாடலுக்கு நாம் சோதித்த போது அங்கு வந்திருக்கும் அனைத்துமே வேலை செய்கிறது, தாங்கள் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  15. சகோதரம் என்னிடம் இருந்த நொக்கியா போன் இப்போ ஒண்பண்ணுகையில் கடவுச் சொல் கேட்கிறது நான் அப்படி எதுவும் கொடுக்கவில்லை அதை மாற்ற அல்லது கண்டு பிடிக்க என்ன செய்யலாம்...

    ReplyDelete
  16. @ மதிசுதா
    எந்த மாடல் அலைபேசி என்று சொல்ல வேண்டாமா ?

    ReplyDelete
  17. @ naprawa sterownika PSG5
    மிக்க நன்றி

    ReplyDelete
  18. SUPER INFORMATION SIR !

    ReplyDelete

Post Top Ad