நம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் நம் வாசகர்கள் பல பேர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர் கடந்த சில வருடங்களாகவே இரண்டாம் பதிப்பு வெளியீடலாம் என்று நினைத்தபோது பல தடைகற்கள் கூடவே விண்டோஸ் -ன் எல்லா ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் நம் வைரஸ் ரீமூவர் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம். இறை அருளால் முடிந்த வரையில் அத்தனையும் சரி செய்து சிறப்பாக கொடுத்திருக்கிறோம். இனி நீங்கள் பயன்படுத்தி தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்று அடுத்து வெளிவரும் பதிப்புகளில் இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்கிறோம்.
நம் வின்மணி வைரஸ் ரீமுவரின் சில முக்கிய அம்சங்கள் :
1. வைரஸ் வந்த பின் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாது ஆனால் வைரஸ் வந்த பின் கூட உங்கள் கணினியில் நம் வைரஸ் ரீமுவர் வேலை செய்யும்.
2. இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.
3. வைரஸ் கோப்புகளை சரியாக கண்டறிந்து சோதனை செய்த பின் தாமாகவே வைரஸை முழுமையாக நீக்கும்.
4. 15 நிமிடத்திற்குள் எல்லா வைரஸ் கோப்புகளையும் நீக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. கணினியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகப்படுத்தும்.
6. நம் வின்மணி வைரஸ் ரீமுவர் முற்றிலும் இலவசம்.
வின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
Winmani Virus Remover V2.0 Download
இச்சேவையை பயன்படுத்திய பின் மறக்காமல் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.